"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

List of National Flower – Part 1

List of National Flower – Part 1 உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் தங்களுடைய தேசிய அடையாளங்களாகக் கொண்டுள்ளன.

தேசியக்கொடி மற்றும் தேசியக்கீதத்தோடு நின்றுவிடாமல்… இயற்கையின் வரப்பிரசாதங்களாக திகழும் மரங்கள், மலர்கள், கனிகள், விலங்கு மற்றும் பறவை போன்ற இயற்கை செல்வங்கள் ஒவ்வொன்றிலும் இருந்து ஒன்றை அதாவது அவைகளில் எது தங்கள் நாட்டில் தனித்துவமாக திகழ்கிறதோ அதில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுத்து தங்கள் நாட்டின் தேசிய சின்னங்களாகவும் பிரகடனப்படுத்துகின்றன.

அதோடு மட்டுமல்லாது தன் நாட்டில் தோன்றிய எதாவது ஒரு விளையாட்டினை தன் நாட்டின் தேசிய விளையாட்டாகவும் முன்னிறுத்துகின்றன.

அப்படியெனில், நம் இந்திய நாட்டிற்கும் தேசிய அடையாளங்கள், தேசிய சின்னங்களெல்லாம் இருக்குமல்லவா?? என கேள்வி எழுப்பினோமென்றால்…

ஆம்… இருக்கின்றன!!..

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தேசிய கொடி இருக்கின்றன. தேசிய கீதம் இருக்கின்றன. தேசிய விலங்கு இருக்கின்றன. தேசிய பறவை இருக்கின்றன. ஆனால், தேசிய விளையாட்டு??…

“ஹாக்கி” என்பதுதானே உங்கள் பதில்….ஆனால் அதுதான் இல்லை…

இன்னாது… ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு இல்லையா?அப்படியென்றால் வேறு எதுதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று கேட்கிறீர்களா?

எதுவுமே இல்லை…

ஆம்… எந்த ஒரு விளையாட்டையும் இந்தியாவின் தேசிய விளையாட்டாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என மத்திய விளையாட்டு அமைச்சகம் அண்மையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெளிவாக தெரிவித்துவிட்டது.

சரி… அப்படியென்றால் தேசிய மலர்??…

List of National Flower – Part 1. இந்தியாவின் தேசிய மலர் எதுவென்ற கேள்வியை எழுப்பியவுடன் உங்கள் முகம் “தாமரை” போல மலர்கிறதல்லவா!!!… ஆனால் அங்கும் உங்களுக்கு ஏமாற்றமே…

நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப்போல “தாமரை” மலர் ஒன்றும் இந்தியாவின் தேசிய மலர் இல்லையாம்….

ஆம்… இதுவரையில் எந்தவொரு மலரையும் இந்திய தேசிய மலராக அறிவிக்கப்படவில்லை என இந்திய அரசு தெளிவாக ஒரு கேள்வி நேரத்தின்போது தெளிவுபடுத்திவிட்டது…

அதோடு நின்று விடாமல் எந்த மலரை தேசிய மலராக அறிவிக்கலாம் என பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளது….

List of National Flower

அவர்கள் பரிசீலிக்கட்டும்… அவசரமில்லை… நிறைய நேரம் இருக்கிறது பொறுமையாகவே பரிசீலிக்கட்டும்… அதுவரையில் நாம் இங்கு “தேமே” என்று இருக்காமல் இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளின் தேசியமலராக எந்தெந்த மலர்களெல்லாம் தேர்வாகியுள்ளன என்பதனை பார்த்துவிடுவோமா?…

வாருங்கள் பார்க்கலாம்!!…

List of National Flower – Part 1

NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
1Afghanistanஆப்கானிஸ்தான்Tulipதுலிப்
2Algeriaஅல்ஜீரியாIris Tectorumஐரிஸ் டெக்டோரம்
3Andorraஅன்டோராNarcissusநாசீசஸ்
4Angolaஅங்கோலாWhite Mariposa Lilyவெள்ளை மரிபோசா
5Antigua and Barbudaஆன்டிகுவா – பார்புடாAgave flowerநீலக்கத்தாழை மலர்
6Argentinaஅர்ஜென்டினாCeiboசெய்போ மலர்
7Australiaஆஸ்திரேலியாGolden Wattleதங்க வாட்டில் மலர்
8Austriaஆஸ்திரியாEdelweissஎடல்வீஸ்
9Bahamasபஹாமாஸ்Yellow Elderநாக செண்பகம்
10Bangladeshபங்களாதேஷ்White Water lilyவெள்ளை லில்லி
List of National Flower - Part 1
National Flower - Agave Ceibo
water lily
NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
11Barbadosபார்படாஸ்Dwarf Poincianaபாயின்சியானா
12Belarusபெலாரஸ்Wild Blue Flaxநீல ஆளி மலர்
13Belgiumபெல்ஜியம்Red Poppyசிவப்பு பாப்பி
14Belizeபெலிஸ்Black Orchidபிளாக் ஆர்க்கிட்
15Bermudaபெர்முடாblue-eyed grassநீலக்கண் மலர்
16Bhutanபூட்டான்Blue Poppyநீல பாப்பி
17BoliviaபொலிவியாCantua, Heliconia rostrataகான்டுவா மற்றும் ரோஸ்ட்ராட்டா
18Bosnia and Herzegovinaபோஸ்னியா – ஹெர்சகோவினாGolden lilyகோல்டன் லில்லி
19Botswanaபோட்ஸ்வானாSengaparileசெங்கபரிலே
20Brazilபிரேசில்Cattleya Labiataகேட்லியா லேபியாட்டா
List of National Flower - Part 1
Blue Poppy
Sengaparile

குறிப்பு :- பொலிவியா (Bolivia) தேசத்திற்கு இரண்டு தேசியமலர்கள் உள்ளன. அதில் ஒன்று கீழ்நோக்கி அழகாக தொங்கிக்கொண்டிருக்கும் “கான்டுவா மலர்” (Cantua).

மற்றொன்று,… “ஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டா” (Heliconia rostrata). இது வந்து… வந்து… இதுவும் கீழ் நோக்கித்தான் தொங்கிக்கொண்டிருக்கும். ஆனால் முந்தையதைவிட இது நீளமானது. அழகானதும் கூட..

ஏன் பொலிவியா நாடு இரண்டு மலர்களை தேசிய மலர்களாக முன்னிறுத்துகின்றன என்கின்ற கேள்வி உங்கள் உள்ளுணர்வில் ஏற்படுகிறதல்லவா? உங்களுக்கான பதிலை இப்போது பார்க்கலாம்.

பொலிவியா (Bolivia) தேசமானது பல இன மக்களை உள்ளடக்கிய ஒரு தேசம் எனலாம்.

நாகரிகமடைந்த “நகர வாழ் மக்கள்” மற்றும் பாரம்பரியம் மிகுந்த “பழங்குடியின மக்கள்” என இரு பெரும் இன மக்கள் இங்கு வாழ்கின்றனர்.

பொலிவியா நாடு இந்த இரு இன மக்களுக்கும் சமமான அந்தஸ்துகளை வழங்கி வருகிறது.

இதன் புவியியல் அமைப்பை பார்த்தோம் என்றால்… அதன் மேற்கு பகுதியில் “ஆண்டிஸ் மலைத்தொடர்” அமைந்துள்ளது.

பொலிவியாவின் நிலப்பரப்பில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் அமைந்திருந்தாலும் அதன் மிகப்பெரிய நகரங்கள் பலவும் அங்குதான் அமைந்துள்ளன. நாகரிகமடைந்த நகரவாழ் மக்களும் அங்குதான் உள்ளனர்.

அந்த மலை அடிவார வெப்பமண்டல பகுதிகளில்தான் “கான்டுவா” (Cantua) தாவரங்கள் அதிக அளவில் இயற்கையாக வாழ்கின்றன. எனவே நகரவாழ் மக்களை முன்னிலைப்படுத்த “கான்டுவா மலர்களை ” (Cantua flower) தேசிய மலர்களாக அறிவித்தது.

நகர மக்களை முன்னிலைபடுத்தினால் போதுமா… இந்நாட்டின் பாரம்பரிய மக்களான பழங்குடி மக்களையும் முன்னிலைப்படுத்த வேண்டாமா?!..

பொலிவியாவின் கிழக்கு பகுதியில் ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது என்றால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் “அமேசான் நதிப்படுகை” அமைந்துள்ளன.

இந்த அமேசான் நதிப்படுகைகளில் புல்வெளிகளும், வெப்பமண்டல காடுகளும் நிறைந்துள்ளன. இங்குதான் பொலிவியாவின் பூர்வீக பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். அங்குதான் அழகும் கவர்ச்சியும் மிகுந்த “ஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டா” (Heliconia rostrata) என்னும் தாவரமும் வாழ்கின்றன.

எனவே,… பழங்குடி மக்களையும் முன்னிலைப்படுத்த “ஹெலிகோனியா ரோஸ்ட்ராட்டா” மலரையும் இரண்டாவது தேசிய மலராக பொலிவியா அறிவித்தது.

“தென்ன மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து… ஆக மொத்தத்துல ரெண்டு குத்து” என்பது போல நாகரிகமடைந்த நகரவாழ் மக்களுக்கு ஒரு தேசிய மலர். பாரம்பரியமிக்க பழங்குடியின மக்களுக்கு ஒரு தேசிய மலர். ஆக மொத்தத்துல இரண்டு தேசிய மலர். அம்புட்டுதான்!…

ithuthan Bolivia ne poththikiddu poviyaa
இதுதான் பொலிவியா… நீ பொத்திக்கிட்டு போவியா…

தேசங்களின் தேசிய மலர்கள்

NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
21BruneiபுருனேSimpur flowerசிம்பர் மலர்
22Bulgariaபல்கேரியாRoseரோஜா
23Burkina Fasoபுர்கினா பாசோRed Roseசிவப்பு ரோஜா
24Cambodiaகம்போடியாRumduol flowerரம்டுவால்
25CanadaகனடாBunchberryபன்ச்பெர்ரி
26ChileசிலிLapageria roseaலாபகேரியா ரோஜா
27ChinaசைனாPlum blossomபிளம் ப்ளாசம்
28Columbiaகொலம்பியாChristmas Orchidகிறிஸ்துமஸ் ஆர்க்கிட்
29Costa Ricaகோஸ்ட்டா ரிக்காGuaria moradaகுவாரியா மொராடா
30CroatiaகுரோஷியாIrisஐரிஸ் மலர்
List of National Flower - Rose
Bunchberry
Iris flower
NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
31CubaகியூபாWhite Mariposa Lilyவெள்ளை மாரிபோசா
32Cyprusசைப்ரஸ்Cyclamenசைக்லேமன்
33Czech Republicசெக் குடியரசுRoseரோஜா மலர்
34Denmarkடென்மார்க்Marguerite Daisyமார்குரைட் டெய்சி
35DominicaடொமினிகாCaribwoodகரீப்வுட் மலர்
36Dominican Republicடொமினிக்கன் குடியரசுBayahibe Roseபயாஹிபே ரோஸ்
37Egyptஎகிப்துWhite Egyptian Lotusஎகிப்திய வெள்ளை தாமரை
38El Salvadorஎல் சால்வடோர்Flor de Izoteஐசோட் மலர்
39Englandஇங்கிலாந்துTudor Roseசிவப்பு வெள்ளை ரோஜா
40Estoniaஎஸ்டோனியாCornflowerகார்ன்ஃப்ளவர்
List of National Flower - Cyclamen
Flor de Izote
Tudor Rose

List of National Flower

NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
41Ethiopiaஎத்தியோப்பியாCalla Lilyகாலா லில்லி
42Faroe Islandsஃபாரோ தீவுகள்Marsh Marigoldமார்ஷ் மேரிகோல்ட்
43Fijiபிஜி தீவுTagimauciaடாகிமௌசியா
44Finlandபின்லாந்துLily of the Valleyபள்ளத்தாக்கு லில்லி
45Franceபிரான்ஸ்Irisஐரிஸ்
46Gabonகாபோன்African Tulipஆப்பிரிக்கன் துலிப்
47Germanyஜெர்மனிCornflowerகார்ன்ஃப்ளவர்
48Gibraltarஜிப்ரால்டர்Candytuftமிட்டாய் மலர்
49Greeceகிரீஸ்Bear’s Breechகரடி மலர்
50Greenlandகிரீன்லாந்துNiviarsiaqநிவியர்சியாக்
List of National Flower -  Calla Lily
Iris
Bears Breech
NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
51Guatemalaகுவாத்தமாலாMonja Blancaமோன்ஜா பிளாங்கா
52GuyanaகயானாVictoria Regia Lilyவிக்டோரியா ரெஜியா லில்லி
53Haitiஹைட்டிHibiscusசெம்பருத்தி
54Hondurasஹோண்டுராஸ்Brassavola Digbyanaபிராசவோலா டிக்பியானா
55Hong Kongஹாங்காங்Hong Kong Orchidஹாங்காங் ஆர்க்கிட்
56Hungaryஹங்கேரிDanube tulipடானூப் துலிப்
57Icelandஐஸ்லாந்துMountain Avensமலை ரோஜா
58Indonesiaஇந்தோனேசியாMelati Putihமர மல்லிகை
59Iranஈரான்Damask roseடமாஸ்க் ரோஜா
60Iraqஈராக்Roseரோஜா
List of National Flower - Monja Blanca
Hong Kong Orchid
Damask rose
NoCountryநாடுகள்National Flowerதேசிய மலர்
61Irelandஅயர்லாந்துShamrockஷாம்ராக்
62Israelஇஸ்ரேல்Poppy Anemoneபாப்பி அனிமோன்
63Italyஇத்தாலிWhite lilyவெள்ளை லில்லி
64Jamaicaஜமைக்காLignum Vitaeலிக்னம் விட்டே
65Japanஜப்பான்Cherry blossomசெர்ரி மலர்
66Jordanஜோர்டான்Black Irisகருப்பு ஐரிஸ்
67Kazakhstanகஜகஸ்தான்Lilyலில்லி
68Kuwaitகுவைத்Arfajஅர்பாஜ்
69Kyrgyzstanகிர்கிஸ்தான்Tulipதுலிப்
70Laosலாவோஸ்Frangipaniஃபிராங்கிபானி
List of National Flower - Shamrock flower
Cherry blossom
Tulip

இந்த பதிவின் மூலம் பல நாடுகளின் தேசிய மலர்களைப்பற்றி தெரிந்து கொண்டீர்கள்தானே? இதில் விடுபட்ட இன்னும் பல நாடுகளின் தேசிய மலர்களைப்பற்றி அறிந்துகொள்ள இதன் தொடர்ச்சியாகிய இரண்டாவது பகுதிக்கு (Part – 2) வருகை தாருங்கள்…

இந்த தொடரின் இரண்டாவது பகுதியை படிக்க (Part – 2) அடுத்து கொடுக்கப்பட்டுள்ள “விஷீவல் லிங்க்” (visual link) ஐ கிளிக்குங்க…

List of National Flower – Part 2

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

One thought on “List of National Flower – Part 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!